அத்து மீறிய ஆம்னி பேருந்து உதவியாளர் - கோயம்பேட்டில் பரபரப்பு.!
amni bus employee attack cmda officer in koyambedu
புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளை சென்னைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது வந்தனர்.
ஆனால், ஆம்னி பேருந்து இயக்க அனுமதி இல்லை என்றும், ஆம்னி பேருந்துகள் இன்று இரவு முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தாங்கள் கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்துகளின் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆம்னி பேருந்து உதவியாளர் ஒருவர், சிஎம்டிஏ அலுவலரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடனே அங்கிருந்த போலீசார் சிஎம்டிஏ அலுவலரை தாக்கிய நபரை, அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார். அதாவது, " கடந்த மாதமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டனர்.
முன்னதாக, பொங்கல் கழித்து கிளாம்பாக்கத்திற்கு மாறி விடுவோம் என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால், தற்போது ஏன் மாற்றி பேசுகிறார்கள் என்றும் இதற்கு பின்னால் உள்ள அரசியல் என்னவென்றும் தெரியவில்லை. கடந்த 22ம் தேதி நோட்டீஸ் அளித்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
கிளாம்பாக்கத்திற்கு மாறுவது தொடர்பாக கடந்த 6 மாதங்களாக பேசப்பட்டு வந்தது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான வசதி இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆம்னி பேருந்துகள் நிறுத்த மோதுமான வசதிகள் கிளாம்பாக்கத்தில் செய்யப்பட்டுள்ளது.
நாளை முதல் தென் மாவட்டங்கள் செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிற்குள் வர அனுமதி இல்லை. தென் மாவட்டத்திற்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் அரசுக்கு இல்லை. அரசு எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
amni bus employee attack cmda officer in koyambedu