பல் பிடுங்கிய பல்வீர் சிங் விவகாரம்.. 2ம் கட்ட விசாரணை நிறைவு செய்தார் அமுதா ஐஏஎஸ்..!!
Amuda IAS completed 2nd phase investigation in Balveer Singh case
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சரக்கத்தில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் விசாரணை கைதிகளை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வேறு சிங் மற்றும் அம்பாசமுத்திரம் காவல் நிலைய அதிகாரிகள் துன்புறுத்தி அவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தமிழக முதல்வர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கடந்த மார்ச் 29ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும் சர்ச்சை ஏற்படுத்திய பல் பிடுங்கிய விவகாரம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள அமுதா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் முதல் கட்ட விசாரணையை முடித்த நிலையில் ஏப்ரல் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் தனது இரண்டாம் கட்ட விசாரணையை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் முன்பு 14 சாட்சியங்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். முதல் நாளில் 11 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்த நிலையில் இறுதி நாளான இன்று மூன்று பேர் அம்பாசமுத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நிலையில் தற்பொழுது விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் சம்பவ நடைப்பெற்ற அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Amuda IAS completed 2nd phase investigation in Balveer Singh case