#விருதுநகர் || வெம்பக்கோட்டை அகழாய்வில் பழங்கால தாலி கண்டுபிடிப்பு.!
Ancient thali found in Vembakottai excavation
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் வைப்பாற்றின் கரையில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் கட்ட அகழாய்வுப் பணியில் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட பழங்காலப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் 2ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட அகழ்வாய்வில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் குறிப்பாக பச்சை குத்த பயன்படுத்தப்படும் இலை வடிவிலான அச்சு, சுடுமண் தட்டு, கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மெருகூட்டும் கற்கள், சுடுமண் சல்லடை, சுடுமண் பானை உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் 2ம் கட்ட ஆய்வின்போது தங்கத்தினாலான பழங்கால தாலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 40% தங்கம் கலக்கப்பட்ட 3 கிராம் எடை கொண்ட தாலியை அகழாய்வின்போது கண்டுபிடித்துள்ளனர். மேலும் தொடர்ந்து நடைபெறும் அகழாய்வில் பல பழங்கால பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Ancient thali found in Vembakottai excavation