அவதூறாக பேசிய பெண் அதிகாரி.. தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர்.. பரபரப்பு வீடியோ..!
Anganwadi worker attempted suicide
பெண் அதிகாரின் தொல்லையால் அங்கன்வாடி ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், இரும்பூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டுவருகிறது இந்த மையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடியில் பணியாளராக இருப்பவர் சுதா.
இவர் நேற்று மாலை காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அங்கன்வாடி மையத்தை இடம் மாற்றம் குறித்து ஒருங்கினைந்த குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட அலுவலர் பஞ்சவரணம் என்பவரிடம் பேச வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அவர் சுதாவை அவதூறாக பேசியதாகவும் அதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும், அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.
இதனை அறிந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊழியரை தற்கொலைக்கு தூண்டிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
English Summary
Anganwadi worker attempted suicide