"நிலுவையில் உள்ள பிஎப் தொகையில் 30 சதவீத தீர்ப்பாயத்தில் கட்ட வேண்டும்" அண்ணா பல்கலைக்கழத்திற்கு உத்தரவு !!
Anna University was directed to pay 30 percent of the outstanding PF amount to the tribunal
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜே.நிஷா பானு, பி.தனபால் ஆகியோர் அடங்கிய பிரிவு குழு, அண்ணா பல்கலைக்கழகம் அதன் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய வருங்கால வைப்பு நிதியில் 30% தொகையை மத்திய அரசின் கணக்கில் செலுத்த 73.23 லட்சம் ரூபாய்க்கு அனுமதி தந்துள்ளது.
வருகின்ற ஜூலை மாதம் 11ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி வரை மூன்று தவணையாக பாக்கி தொகையை டெபாசிட் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிடப்பட்டது.
பல்கலைக்கழக ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியை செலுத்துவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இந்த உத்தரவு உயர்நீதி மன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோயம்புத்தூர் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர், தங்கள் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியாக ரூ.2.44 கோடியை தற்போது செலுத்துமாறு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.
மத்திய அரசின் தொழில்துறை தீர்ப்பாயத்தை அணுகியபோது, மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்கான முன்நிபந்தனையாக 45% நிலுவைத் தொகையை டெபாசிட் செய்ய பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
English Summary
Anna University was directed to pay 30 percent of the outstanding PF amount to the tribunal