நீதித்துறை சுதந்திரத்தில் அரசியல் தலையீடு?...உச்ச நீதிமன்ற நீதிபதி பரபரப்பு உரை!
Political interference in judicial independence supreme court judge sensational speech
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், பொதுவாகவே, நீதித்துறையின் சுதந்திரம் என்பது நிர்வாகத்திற்கு கட்டுப்படாத சுதந்திரம் என்று வரையறுக்கப்பட்டது என்றும், இப்போதும் நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரமாக செயல்படுவதையே குறிக்கிறது என்று கூறிய அவர், ஆனால் அது மட்டுமே நீதித்துறை சுதந்திரத்தின் அடிப்படையில் அல்ல என்று கூறினார்.
மேலும், சமூக ஊடகங்களின் வருகையால், , நம் சமூகம் மாறிவிட்டதாக கூறிய நீதிபதி, மின்னணு ஊடகங்களை பயன்படுத்தி தங்களுக்கு சாதகமான முடிவுகளைப் பெற நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும் சில குழுக்கள் செயல்படுவதை காணமுடிவதாக தெரிவித்தார்.
நீதிபதிகள் தங்களுக்கு சாதகமாக முடிவெடுத்தால், அதை நீதித்துறையின் சுதந்திரம் என்று அழைக்கப்படுவதாக கூறிய அவர், அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும், ஒரு நீதிபதிக்கு அவரது மனசாட்சி என்ன சொல்கிறது என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று கூறினார்.
நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவதோ அல்லது அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், நீதித்துறை சுதந்திரமாக இல்லை என்று அர்த்தமில்லை. அது சுதந்திரம் பற்றிய வரையறை அல்ல என்று கூறினார்.
English Summary
Political interference in judicial independence supreme court judge sensational speech