திமுகவினர் அராஜகம் | இந்திய இராணுவ வீரரை அடித்தே கொலை செய்த திமுக கவுன்சிலர் - கொந்தளிப்பில் அண்ணாமலை!
Annamalai Condemn For Army Man Killed Pochampalli
போச்சம்பள்ளியில் திமுக கவுன்சிலர் இந்திய இராணுவ வீரரை அடித்தே கொலை செய்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், “சட்டம் - ஒழுங்கு எப்படி போனால் எனக்கென்ன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பதை பொதுமக்கள் பார்த்து கொண்டு உள்ளனர்” என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், "கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே 29 வயதே ஆன ராணுவ வீரர் பிரபு, திமுக பேரூராட்சி கவுன்சிலர் ஒருவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து அதிர்ச்சியும் கோபமும் அடைந்தேன்.
ராணுவ வீரர்களுக்கு, திமுகவினர் அராஜகத்தால், சொந்த ஊரிலேயே பாதுகாப்பில்லை. தங்கள் உயிரையும் துச்சமென கருதி எல்லையில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களையும், அவர்கள் குடும்பத்தினரை மிரட்டுவதும், அவர்கள் மேல் தாக்குதல் நடத்துவதும், தற்போது கொலையே செய்யும் அளவுக்கு, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் உருமாறியுள்ளது.
காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், சட்டம் - ஒழுங்கு எப்படி போனால் எனக்கென்ன என்று இருப்பதை, பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
உடனடியாக கொலையாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மேலும் இது போன்ற சமூக விரோதச் செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டுமென, தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று அண்ணாமலை அதில் தெரிவித்துள்ளார்.
English Summary
Annamalai Condemn For Army Man Killed Pochampalli