தொப்புள்கொடி உறவு இருக்க... ''நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்'' - அண்ணாமலை.!
Annamalai interview after voting
18 வது மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்டமாக மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் பா.ஜ.க மாநில தலைவரும் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கரூர் தொகுதிக்குட்பட்ட தோட்டம் பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். வாக்காளர் பெருமக்கள் மட்டும் தான் இந்த ஜனநாயகத்தின் வலிமை.
வாக்காளர் பெருமக்கள் தான் இந்த நாடு எப்படி செல்ல வேண்டும். நல்லவர்கள் நம்மை ஆள வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். நாட்டை ஆளுபவருக்கும் நமக்கும் தொப்புள்கொடி உறவு இருக்க வேண்டும்.
சிந்தித்து எல்லோரும் வாக்களிப்போம் .நான் எனது ஜனநாயக கடமையை ஆற்றி விட்டேன். தமிழகத்தில் உள்ள அனைத்து அன்பு செல்வங்களுக்கும் வேண்டுகோள்.
மாலை 7 மணிக்குள் நீங்கள் எங்கிருந்தாலும் தங்களது வாக்குகளை செலுத்துங்கள். நல்ல ஒரு ஆட்சி அமைய உதவுங்கள். நல்லவர்களுக்கு வாக்களியுங்கள். பெரிய மாற்றத்தை கொண்டு வருவார்கள் என தெரிவித்துள்ளார்.
English Summary
Annamalai interview after voting