இத்தனை வசதிகளா..!! 221 ஏக்கரில் மதுரை எய்ம்ஸ்.. சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பம்.!!
Application submitted for madurai AIIMS environment clearance
கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மதுரையை மருத்துவமனையின் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில் உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து திமுக அரசியல் பேசி வரும் நிலையில் தமிழக அரசு நிலம் வழங்கி சுற்றுச்சூழல் ஒப்புதல் வழங்காததால் கட்டுமான பணிகள் தொடங்க தாமதம் ஏற்படுவதாக மத்திய பாஜக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது மத்திய அரசு.
அதன்படி மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 221 ஏக்கரில் அமைய உள்ள நிலையில் மருத்துவமனைக்குள் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், அவரச சிகிச்சைப் பிரிவு, மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகு கட்டுமானம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Application submitted for madurai AIIMS environment clearance