சாலையில் கிடந்த 7 பவுன் தங்க நகை! நேர்மையாக உரியவரிடம் ஒப்படைத்த தம்பதிக்கு குவியும் பாராட்டு.!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த ஆச்சியூரை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனது பர்சில் வைத்திருந்த 7 பவுன் சங்கிலி மற்றும் 2000 ரூபாயை தவறவிட்டதாக தாராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், தாராபுரத்தை அடுத்த  உப்புத்துறைபாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மற்றும் இவரது மனைவி சாரதா ஆகியோர் தாராபுரம்-கரூர் சாலையில் கிடந்த பர்சை எடுத்து திறந்து பார்த்தனர்.

அதில் தங்கச்சங்கிலியும் 2000 ரூபாய் பணமும் இருந்ததை பார்த்த தம்பதியினர் அதனை தாராபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதையடுத்து காவல்துறையினர் மூதாட்டி லட்சுமியை வரவழைத்து அவருடைய 7 பவுன் சங்கிலி மற்றும் 2000 ரூபாய் பணத்தை லட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து சாலையில் கிடந்த நகை மற்றும் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த தம்பதியினருக்கு காவல்துறையினர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Appreciation heaps on the couple who handed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->