பெண் கேட்டுப்போன இளைஞருக்கு மோசமான அனுபவம்.! தூக்கில் தொங்கிய சோகம்.!  - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் கஸ்தம்பாடி பகுதியில் ஏழுமலை என்ற நபருக்கு 21 வயதில் சாமராஜ் என்ற மகன் இருந்துள்ளார். சென்னையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

சாமராஜ்க்கு, அதே பகுதியை சேர்ந்த  வெங்கடேசன் மகள் ஈஸ்வரியுடன் காதல் ஏற்பட்டது. 17 வயதான ஈஸ்வரி 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் வெங்கடேசனுக்கு, தெரியவர அவர் தனது உறவுக்கார இளைஞருடன் ஈஸ்வரிக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ஈஸ்வரி தனது காதலன், சாமராஜிடம் உறவினர்களுடன் வந்து பெண் கேட்க சொல்லியுள்ளார்.

எனவே, சாமராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து, ஈஸ்வரி  வீட்டிற்கு வந்து பெண் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் சாமாராஜை வீட்டிற்கு வரச்சொல்லி அழைத்து அடித்து அவமானப்படுத்தும் வகையில் திட்டியுள்ளார். மேலும், ஈஸ்வரியுடன் சாமராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சாமராஜ் செல்போனிலிருந்து அழித்துள்ளார். 

பின், சாமராஜ் மற்றும் அவரது நண்பர்களை கழுத்தை பிடித்து வெளியே தள்ளியுள்ளார். இதனால், வீட்டிற்கு வந்த சாமராஜ், மன உளைச்சலிலும் அவமானத்திலும் இருந்து வந்த நிலையில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து போலிசார் வெங்கடேசன் பெயரில் வழக்கு பதிந்து தலைமறைவாகி இருக்கும் அவரை தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arani Youngster Suicide for Love


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->