7 நாட்களாக உலாவந்த அரிக்கொம்பன் யானை பிடிபட்டது.!!
arikomban elephant caught in theni
7 நாட்களாக உலாவந்த அரிக்கொம்பன் யானை பிடிபட்டது.!!
சமீப நாட்களாகவே தேனி மாவட்டத்திற்குள் 'அரிக்கொம்பன்' யானை புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இந்த யானையை பிடிப்பதற்காக கடந்த 28-ந் தேதி 3 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன. இந்த யானைகள் கம்பத்தில், கூடலூர் சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள புளியந்தோப்பில் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து அந்த கும்கி யானைகள் கம்பம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாகன்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே அரிக்கொம்பன் யானை உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகநாதர் கோவில் வனப்பகுதியில் சுற்றித்திரிவது தெரியவந்தது.
![](https://img.seithipunal.com/media/arikomban elephant 1-6khwk.png)
இந்த நிலையில் அறிக்கொம்பன் யானை கம்பம் அருகே சண்முகா அணையில் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பின்னர் வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு 7 நாட்களாக தேனியில் உலா வந்த அரிக்கொம்பன் யானையை தேனி சின்னமனூர் அருகே 4 மயக்க ஊசிகள் செலுத்தி இன்று பிடித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மூன்று கும்கி யானைகள் உதவியுடன் அரிக்கொம்பன் யானையை லாரியில் ஏற்றி மாற்று இடத்திற்கு வனத்துறையினர் கொண்டு செல்கின்றனர். ஆனால் அரிக்கொம்பன் எங்கு விடப்படும் என்ற தகவல் இதுவரைக்கும் தெரிவிக்கப்படவில்லை.
English Summary
arikomban elephant caught in theni