#அரியலூர் : ரோஹித், விராட் கோலியை திட்டிய நண்பனை கொலை செய்த இளைஞர்.!
ariyalur dharmaraj killed her friend vignesh for kholi and rohit sharma
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யூர் கிராமத்தில் விக்னேஷ் என்ற இளைஞர் கிராமத்திற்கு வெளியில் இருக்கும் காட்டுப்பகுதியில் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து கீழப்பழுவூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விக்னேஷ் தனது நண்பர்களான தர்மராஜ் மற்றும் பிரபாகரன் இருவருடனும் சேர்ந்து முன்தினம் மது அருந்தியது தெரியவந்துள்ளது.
ஊருக்கு வெளியில் இருக்கும் காட்டு பகுதியில் 3 பேரும் முன்தினம் மாலையில் அமர்ந்து மது அருந்தினர். அப்பொழுது தர்மராஜ் அரிவாளை எடுத்து விக்னேஷின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் துடி துடித்து உயிரிழந்தார். இது குறித்து தர்மராஜ் கைது செய்து விசாரித்ததில் அவர் எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் கோலி இருவரையும் திட்டினார்கள். எனவே, தான் ஆத்திரத்தில் கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பெயர் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
English Summary
ariyalur dharmaraj killed her friend vignesh for kholi and rohit sharma