#அரியலூர் : உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த மான்..போலீஸ் தீவிர விசாரணை.!! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தில் மான் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுகடம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சங்கீதராஜா அவருக்கு சொந்தமான நிலத்தில் நீர்பாசன முறையில் முந்திரி மட்டும் தீவனப் பயிர்களை பதிவிட்டு வந்துள்ளார். அதிகாலை வேலையில் தோட்டத்துப் பக்கம் சென்றபோது மான் ஒன்று இறந்து கிடப்பதை கண்ட சங்கீதராஜா அதிர்ச்சி அடைந்து ஊர் கிராம தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சிறுகடம்பூர் கிராம தலைவர் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் மானின் உடலை எடுத்து சென்றனர். மான் இறந்த சம்பவம் தொடர்பாக இரும்புலிகுறிச்சி போலீசார் சிறுகடம்பூர் பகுதி மக்களிடையே விசாரணை நடத்தி வருகின்றனர். மான் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur district deer died police investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->