கள்ளிப்பால் குடித்த அரியலூர் அரசு பள்ளி மாணவர்கள்! ஆசிரியர்கள் போராட்டத்தால் நடந்த விபரீதம்! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இன்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் இன்று வகுப்புகள் முடங்கிப் போய் உள்ளன.

தமிழகத்தின் பல பள்ளிகள் இன்று ஆசிரியர்கள் இல்லாமலேயே இயங்கி உள்ளன.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டம், குனமங்கலம் பகுதியில் இயங்கி வந்த தமிழக அரசின் தொடக்கப்பள்ளி ஒன்றில், ஒரு விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.

மூன்றாம் வகுப்பு படிக்கக்கூடிய நான்கு மாணவர்கள் மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கக்கூடிய ஒரு மாணவன், கள்ளிச்செடியை உடைத்து அதில் வருகின்ற பாலை வெளியே எடுத்து, சுவைத்து பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த கள்ளிப்பாலை குடித்த ஐந்து மாணவர்களுக்கும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் மாணவர்கள் இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ariyalur school student taste kallipal issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->