#திருச்சி || கட்டாய திருமணம்., கம்பி நீட்டிய புதுமணப்பெண்., தந்தை எடுத்த முடிவால் பெரும் சோகம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே மாயமான புதுப்பெண்ணால், தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அரியூர் பகுதியை சேர்ந்த 28 வயது நிரம்பிய  மாரியப்பனிற்கும், அதே பகுதியை சேர்ந்த 20 வயது நிரம்பிய வைஷ்ணவி என்ற பெண்ணிற்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியுடன் தங்களது வாழ்க்கையை தொடங்கிய இவர்களுக்குள் இரண்டு மாதங்களுக்கு பிறகு திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது தெரியப்படுகிறது .   

புதுமணப்பெண் வைஷ்ணவி, திடீரென வீட்டிலிருந்து மாயமானார். வைஷ்ணவியின் கணவரும், குடும்பத்தினரும் சேர்ந்து உறவினர்களின் வீடு உள்பட, பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப்பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை .

இதனையெடுத்து, மாரியப்பன் லால்குடி காவல் நிலையத்தில்  புகார் அளித்தார்.இப்புகாரின்  பேரில் வழக்குப்பதிவை  மேற்கொண்ட போலீசார் நடத்திய விசாரணையின் போது  வைஷ்ணவியும், அன்பில் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கும் காதலித்து  வந்தது தெரியவந்தது .

இதனால், வைஷ்ணவியை அவரின்  பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி மாரியப்பனிற்க்கு  திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் அந்த பெண் கார்த்திக்கை தொடர்பு கொண்டு அவருடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்துடன் வைஷ்ணவியை  தேடி வருகின்றனர்.  

இதற்கிடையே, வைஷ்ணவியின் தந்தை சண்முகம், திருமணம் செய்து கொடுத்த தன் மகள் ஓடிப்போனதை நினைத்து மனம் நொந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர், சண்முகம் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கிகிச்சை பெற்று வந்த நிலையில், சண்முகம்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ariyur new married lady escape father suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->