ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்: காவல் ஆணையர் அருண் வெளியிட்ட முக்கிய தகவல்!
Armstrong case Arun IPS
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை பொறுத்த வரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான (முன்னாள்) அஸ்வத்தாமனும், அவரின் தந்தையும் பிரபல ரவுடியுமான நாகேந்திரனும் தான் மூல காரணம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக காவல் ஆணையர் அருண் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 சதவீத வழக்கு விசாரணை நிறைவடைந்து உள்ளதாகவும், மூன்று முக்கிய ரவுடிகள் இன்னும் பிடிப்படவில்லை என்றும் காவல் ஆணையர் அருண் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்போ செந்தில் உள்ளிட்ட அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம் என்றும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல் ஆணையர் அருண் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் ரவுடிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த தனி படை தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் காவல் ஆணையர் அருண் தகவல் தெரிவித்துள்ளார்.