என்கவுண்டரா? சிறையில் பாதுகாப்பாக இருக்கிறார்! ரவுடி நாகேந்திரன் மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
Armstrong case nagendran wife HC case
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை பொறுத்த வரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான (முன்னாள்) அஸ்வத்தாமனும், அவரின் தந்தையும் பிரபல ரவுடியுமான நாகேந்திரனும் தான் மூல காரணம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், ரவுடி நாகேந்திரனும் படுகொலை செய்யப்படலாம் என்று அஞ்சி அவரின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில், நாகேந்திரனின் உயிருக்கு பாதுகாப்பு தேவை என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், நாகேந்திரன் சிறையில் பாதுகாப்பாக இருக்கும் நிலையில், எந்த அடிப்படையில் அவரை போலீசார் என்கவுண்டர் செய்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்று கூறி, நாகேந்திரனின் மனைவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
English Summary
Armstrong case nagendran wife HC case