ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம்: தாய்லாந்துக்கு தப்பி ஓடிய முக்கிய புள்ளி! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்து வரும் சம்போ செந்தில் கூட்டாளி வெளிநாட்டிற்கு தப்பி ஓடி உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஐந்தாம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் வைத்து ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருவேங்கடம் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சம்போ செந்திலை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் சம்போ செந்திலின் கூட்டாளி கிருஷ்ணன் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஹரிஹரனுக்கு, கிருஷ்ணன் நெருக்கமாக இருந்து வந்ததாகவும் போலீசார்ன் விசாரணைகள் தெரியவந்துள்ளது.

ஹரிஹரன் கைது செய்யப்பட்டதும், கிருஷ்ணன், சிவா உட்பட 3 பேர் காரில் திருச்செந்தூர் சென்றுள்ளனர். பிறகு மதுரை சென்று, தனது காரை சிவாவிடம் கொடுத்து சென்னைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார் கிருஷ்ணன்.

சென்னைக்கு வந்த சிவாவை கைது செய்த போலீசார், கிருஷ்ணன் குடும்பத்துடன் தாய்லாந்து தப்பி சென்றதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் இந்த கொலை வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியாக கருதப்படும் ரவுடி சீசிங் ராஜாவையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong Case one culprit escaped


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->