ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் முக்கிய புள்ளியின் கூட்டாளி மாட்டு ராஜா கைது! - Seithipunal
Seithipunal


ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தலைமறைவாக இருக்கும் புதூர் அப்புவின் கூட்டாளி மாட்டு ராஜா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை இந்த வழக்கில் 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, விசாரணை விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 4 பேர் இந்த வழக்கில் தேடப்பட்டு வருகின்றனர். 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞரும், முக்கிய நிர்வாகியுமான அஸ்வத்தாமன் (கைதுக்கு பின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்) என்பவர்தான், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணம் என்றும், சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் மாமூல் வசூல் செய்து மிரட்டியதாக வந்த புகாரில் தனிப்படை போலீசார் மாட்டு ராஜாவை கைது செய்து உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெடிகுண்டு சப்ளை செய்ததாக, புதூர் அப்புவை போலீசார் தேடி வரும் நிலையில் அவரின் கூட்டாளி தான் இந்த மாட்டு ராஜா என்பது தெரியவந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மாட்டு ராஜாவுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக நேற்று, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் ஹரிகரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகிய நான்கு பேருக்கு தொழில் செய்ய தடை விதித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong Case TN Police Arrest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->