நெல்லையில் பரிதாபம் - படிக்கட்டில் தவறி விழுந்து ராணுவ வீரர் உயிரிழப்பு.!!
army man died fell down on steps in tirunelveli
நெல்லையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, உக்கிரன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிதுரை மகன் செல்வகுமார். இவர் அசாமில் ராணுவ வீரராக பணி புரிந்து வந்தார். இவருடைய மனைவி குடும்பப் பிரச்சினையினால் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில், விடுமுறை எடுத்துவிட்டு சொந்த ஊருக்கு வந்த செல்வகுமார் நேற்று இரவு வீட்டில் மாடிபடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் அவருடைய பின் தலையில் அடிபட்டுள்ளது. இதனால், வலி தங்க முடியாமல் செல்வகுமார் அலறினார். இந்த சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் வந்து பார்த்துள்ளனர்.
அப்போது அவர் ஒன்றும் இல்லை; சிறிய அடிதான், சிறிது நேரம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று தெரிவித்து விட்டு கட்டிலிலும் போய் படுத்துக் கொண்டார். இதையடுத்து செல்வகுமாரின் தாய் அவரை சாப்பிட அழைத்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் செல்வகுமார் வெளியே வரவில்லை.
இதனால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர்கள் விரைந்துச் சென்று செல்வக்குமாரைப் பார்த்துள்ளனர். ஆனால், அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அவரது குடும்பத்தினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் செல்வகுமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
army man died fell down on steps in tirunelveli