மாநகர பேருந்து சக்கரத்தில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழப்பு.!
army man died for accident in pallikaranai
மாநகர பேருந்து சக்கரத்தில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழப்பு.!
சென்னையில் உள்ள சித்தாலப்பாக்கம் அடுத்த சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சுந்தர். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தற்போது ராமாபுரத்தில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இவர் வழக்கம் போல் அலுவலகத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணை-வேளச்சேரி சாலை வழியாக வேளச்சேரி நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
இதையடுத்து இவர் பள்ளிக்கரணை சிவன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே சென்ற பசுமாடு மீது எதிர்பாராதவிதமாக மோதி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.
அந்த நேரத்தில் பின்னால் வந்த மாநகர பேருந்து அவரது தலை மீது ஏறி இறங்கியதில் ஜெய்சுந்தர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து பொலிசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து ஜெய் சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மாநகர பேருந்து ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
army man died for accident in pallikaranai