#BREAKING || அதிக வட்டி தருவதாக கூறி மோசடி.. ஏ.ஆர்.டி நிறுவன உரிமையாளர்கள் கைது..!!
ART company owners arrested in fraud case
சென்னை நொளம்பூர் பாரதி சாலையில் ஏ.ஆர்.டி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோர்தங்க நகை சேமிப்பு, தங்க நகைக் கடன் மற்றும் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம் வீதம் 1 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர். இதனை நம்பிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் லட்சக்கணக்கில் ஏ.ஆர்.டி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த முதலீட்டு பணத்தில் ஏ.ஆர். மால் மற்றும் பல மாவட்டங்களில் நகைக்கடையின் கிளைகள் என தொழிலை பெருக்கிய இவர்கள் சில நாட்கள் வட்டியை வாரி வீசி வந்த நிலையில் வட்டி தராமல் பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டனர்.
இதனால் ஏமாந்த மக்கள் பலர் நகைக்கடை, ஏ.ஆர். மால் என பல இடங்களில் முற்றுகையிட்டதில் அவர்களை குண்டர்களை வைத்து தாக்கியதால் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஏ.ஆர்.டி நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின் உட்பட நிர்வாகிகள் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் மீது நிறைய புகார்கள் குவிய தொடங்கியதால் இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏ.ஆர்.டி நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின், ராபின் மற்றும் தொடர்புடைய ஏஜெண்டுகள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த ஏப்ரல 6ம் தேதி இந்நிறுவனத்துடன் தொடர்புடைய 5 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். குறிப்பாக நொளம்பூர், திருமங்கலம், முகப்பேர் ஆகிய இடத்தில் உள்ள ஏ.ஆர்.டி மால், ஜுவல்லரி நகைக்கடை உள்ளிட்ட 5 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி பொதுமக்களை நம்ப வைத்து மோசடியில் ஈடுப்பட்டுள்ளனரா என்பதன் நிறுவனத்தில் உள்ள ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஏ.ஆர்.டி நிறுவனத்திற்கு ஏஜெண்டாக வேலை செய்த பிரியா என்பவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் ஏ.ஆர்.டி நிறுவன உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின் ஆகிய வரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர். இருவரையும் நொளம்பூரில் உள்ள நகைக்கடை மற்றும் மாலுக்கு அழைத்துச் சென்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
English Summary
ART company owners arrested in fraud case