ஜாமின் கேட்ட ஆருத்ரா மோசடி கும்பல்! தள்ளுபடி செய்த நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


பணம் மோசடி வழக்கில் ஆருத்ரா நிறுவன அதிகாரிகள் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை  அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, திருவள்ளூர், ஆரணி, செய்யார், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு வர்த்தக நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்த நிறுவனம் முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாக மக்களிடம் ஆசை வார்த்தை கூதி சுமார் 1 லட்ச பேரிடம் இரண்டு லட்சத்து 438 கோடி வசூலித்து மோசடி செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி அந்த நிறுவனத்தில் இயக்குனர், கிளை மேலாளர்கள் அருண்குமார் ஜெனோவா உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களில் அருண்குமார் மற்றும் ஜெனோவா ஆகியோர் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி நேற்று விசாரணைக்கு அந்த மனு வந்தது 

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, காவல்துறை தரப்பிலிருந்து வழக்கில் இன்னும் பலர் கைது செய்யப்பட வேண்டி இருப்பதாலும் பலர் தலைமுறைவாக உள்ளதாலும் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிளை மேலாளர்கள் அருண்குமார், ஜெனோவா ஆகியோரின் ஜாமின் மனுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arudra official bail plea dismissed in money laundering case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->