சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பெரும் புள்ளி! ரூ. 62 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் ரூ. 62 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பல்வேறு விமான சேவைகள் இயங்கி வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

சமீப நாட்களாக தங்கம் கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பயணி ஒருவர் உள்ளாடைக்குள் 960 கிராம் தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது.

அதனையடுத்து  சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட வந்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 62 லட்சம் என கூறப்படுகிறது. சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மேலும் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

At Chennai Airport Rs 62 lakh worth of gold seized


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->