சென்னை: ஏடிஎம் மையத்தில் வெடித்த துப்பாக்கி! காவலாளி வயிற்றில் பாய்ந்த குண்டு! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை சேத்துப்பட்டில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் வட மாநில ஊழியர் துப்பாக்கியை துடைக்கும் போது தெரியாமல் இடுப்பில் சுட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராணா குமார் கடந்த 10 ஆண்டுகளாக சூளைமேட்டில் தங்கி சேத்துப்பட்டில் உள்ள ஹரிங்டன் சாலை அமைந்துள்ள ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

வழக்கம் போல் இன்று காலை ராணா குமார் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது துப்பாக்கியை துடைத்துள்ளார். அப்போது திடீரென அவரது துப்பாக்கியின் ட்ரிகர் தெரியாமல் அழுத்தப்பட்டதால் அவருடைய வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பயந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த ராணா குமாரை அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அவசர சிகிச்சை பதிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ராணா குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகின்றனர். ராணா குமார் முறையாக துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றுள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தனியார் நிறுவனத்தின் மூலம் சென்னையில் மட்டும் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ATM refilling company security guard gun on his stomach in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->