எண்ணூரில் பதற்றம்! கல்லூரி மாணவி மர்ம மரணம்! போலீசாருக்கு தெரியாமல் அடக்கம்! - Seithipunal
Seithipunal


எண்ணுரில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி உடலை போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னை எண்ணூர் சின்ன குப்பம் தெருவில் வசிபவர் இளங்கோ. இவரது மகள் ஹேமலதா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மாணவி ஹேமலதா நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதைப் பற்றி போலீசருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் ஹேமலதா பெற்றோர்கள் மற்றும் அவரது உணவினர்கள் அவரது உடலை நேற்று காலை என் ஊரில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய இறுதி சடங்குகள் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த எண்ணூர் போலீஸ் சார் சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்கள் மற்றும் ஊர் நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு மாணவியின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது பற்றி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவி வயிற்று வலியால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? அல்லது பெற்றோர்கள் காதல் விவகாரத்தில்  தற்கொலை செய்ய தூண்டினார்களா? என்று கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

attempt was made to bury the body of a college student who committed suicide in Ennore without the knowledge of the police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->