சென்னை: தீபாவளிக்கு கார் மற்றும் பைக்கில் சொந்த ஊருக்கு செல்பவர்கள் கவனத்திற்கு.!  - Seithipunal
Seithipunal


வரும் அக்டோபர் 24ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பெரு நகரங்களில் வேலை செய்யும் நபர்கள் சொந்த ஊருக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட செல்வார்கள். 

அவர்களுக்கு ஏதுவாக அரசு சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவற்றை இயக்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் பலர் இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் சொந்த ஊருக்கு செல்வார்கள். தற்போது அவர்களுக்கு போலீசார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். 

நாளை முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை சென்னையின் முன்னணி நகரங்களில் இருந்து கார் மற்றும் டூவீலர் மூலம் வெளியூருக்கு செல்பவர்கள் பெருங்குளத்தூர் தாம்பரம் வழியை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். 

அத்துடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் நபர்கள் திருப்போரூர், செங்கல்பட்டு வழியே பயணம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

attention chennai peoples to select road to home


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->