அரசு நிகழ்ச்சியை அவமதித்த சுகாதாரத்துறை அமைச்சர்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள எழும்பூரில் பருவகால காய்ச்சல்களை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்சியில் தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் H1N1, டெங்கு, வைரஸ் காய்ச்சல்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், தமிழகம் முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில் மருத்துவர்கள் நர்ஸ்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்,  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த ஆயிரம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நேரடியாகவும், மற்ற மாவட்டங்களை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்க்கு காணொளி மூலமாகவும் பயிற்சிகளை வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நேரடியாகவும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், “பயிற்சி என்ற பெயரில், அதிகாரிகள் 50 செவிலியர்களை மட்டுமே வரவழைக்கப்பட்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதைக் கண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், "இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றால் எந்தப் பயனும் இல்லை" என்று தெரிவித்து, அதிகாரிகளுடன் இருந்து கோபத்தில் புறக்கணித்து விட்டு சென்றார். இதன் காரணமாக, நிகழ்ச்சி எற்பாடு செய்த அதிகாரிகள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

awarness programme by health department minister avoide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->