முடிவுக்கு வந்தது பிரச்னை! ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூர் கிராமத்தில் அடக்கம்!  - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் கிராமத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்யக் கூடாது என்பதுதான் பிரச்னை. கட்சி அலுவலகத்தில் நினைவு மண்டபம் கட்ட எந்த பிரச்னையும் இல்லை. அரசு அனுமதியுடன் கட்டிக் கொள்ளலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நாளை பள்ளி திறக்கப்பட வேண்டும் என்பதால், உடலை பள்ளி மைதானத்தில் இருந்து இன்றே எடுத்தாக வேண்டும். உடல் எடுத்துச் செல்லப்படும் 20 கி.மீ. தூரத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பெரம்பூரில் இருந்து அவரின் உடல் அடக்கம் செய்யும் கூடிய பொத்தூர் பகுதிக்கு இடையே சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த 20 கிலோமீட்டர் தூரமும் ஆம்ஸ்ட்ராங் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டுவரப்பட உள்ளது. 

ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குனர்கள் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bahujan Samaj Party Armstrong death case hc order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->