தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை - விளையாட்டு ஆணையம் பரிந்துரை!
Ban on Online Games in Tamil Nadu Recommendation by Sports Commission
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் தமிழக அரசிற்கு புதிய பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
அதில், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கலாம் என்றும், ஒரு நாளைக்கு 4 மணி நேரத்துக்கு மேல் விளையாட அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு மாதமும் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே பணம் செலுத்தி விளையாடும் வகையில் திருத்தங்களை செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
மேலும், சுமார் 1.5 லட்சம் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைகள் பலர் தங்களது பெற்றோர்களின் செல்போன்களையே ஆன்லைன் விளையாட்டுக்காக பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடும் வல்லுநர்கள், குறிப்பிட்ட நேரம் தான் விளையாட முடியும் என்பதை கொண்டு வந்து விட்டால் நிச்சயமாக ஆன்லைன் விளையாட்டுகளில் குழந்தைகள் அதிகமாக நேரத்தை செலவழிப்பது குறையும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் பட்சத்தில், பணம் கட்டாமல் பொழுதுபோக்காக விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு இது பொருந்தாது என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Ban on Online Games in Tamil Nadu Recommendation by Sports Commission