திருவண்ணாமலை தீபத்திருவிழா :: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது..!! - Seithipunal
Seithipunal


உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை மாத தீபத்திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றி வைத்தனர். 

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அண்ணாமலையாரைக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அண்ணாமலையார் மலையேற 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharani Deepam lit in thiruvannamalai Annamalaiyar Temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->