புதுவையில் பாரதிதாசனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை!
Bharathidasans birthday celebrations in Puducherry Leaders garlanded
பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தலைசிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி புதுச்சேரியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.
இவர் 1954ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவரது பிசிராந்தையார் நாடகத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. தம் எழுச்சிமிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்ட பாரதிதாசன் 72வது வயதில் 1964 ஏப்ரல் 21 ஆம் தேதி அன்று மறைந்தார்.
பாவேந்தர் பாரதிதாசனை போற்றும் வகையில், அவர் பிறந்த நாளான ஏப்ரல் 29-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் "தமிழ் வாரம்" கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் மே 5-ந்தேதி வரை தமிழ் வாரம் கொண்டாடப்படுகிறது.
மேலும், பாரதிதாசனின் 135-வது பிறந்தநாளான இன்று சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவருடைய உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல புதுச்சேரியில் பிறந்த பாரதிதாசனை போற்றும் வகையில் அவரது சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
English Summary
Bharathidasans birthday celebrations in Puducherry Leaders garlanded