தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம்..மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாகம்! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு சராசரி அளவில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டுவருகிறது, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் இந்த போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள்  வீட்டில் முன் இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வருவது வழக்கம்.

அதன்படி  தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப் பட உள்ள நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகையை தமிழக மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.இதேபோல தமிழகம் முழுவதும் பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடி வரும்நிலையில் பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு சராசரி அளவில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வேண்டும் இன்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bhogi festival celebrated across Tamil Nadu Kids cheer by beating drums


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->