ஆம்ஸ்ட்ராங் கொலை: பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு பாதுகாப்பு கேட்டு மனித உரிமை ஆணையத்தில் மனு! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பு உள்ளதாக வெளியான செய்தியை தொடர்ந்து, நாகேந்திரன் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி அவருடைய மனைவி விசாலாட்சி தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரின் அந்த மனுவில், 24 ஆண்டுகளாக என்னுடைய கணவர் நாகேந்திரன் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் என்னுடைய கணவர் நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக பொய் செய்திகள் பரப்பி வருகின்றனர். 

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் போல்கிஸ் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே என் கணவரின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்" என்று மனைவி விசாலாட்சி தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் சம்போ செந்திலை பிடிக்க போலீசார் தீவிரம் கட்டி வருகின்றனர்.

5 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சம்போ செந்திலுக்கு நெருக்கமான தொடர்புகள்  குறித்தும், நெருங்கியவர்களை பிடித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக சம்போ செந்தில் நேபால் நாட்டிற்கு தப்பி சென்று விட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bhujan Samaj Party Armstrong case Nagendiran HumanRights


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->