திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பு!...போலி சாமியாரை அடித்து உதைத்த நரிக்குறவர் பெண்!....நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஆன்மீகத் தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதை உள்ளது. இங்கு மாதம்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்திற்கு செல்கின்றனர்.

அவ்வாறு கிரிவலம் வந்த பக்தர்களிடம் விபூதி பூசி விட்டு கஞ்சா போதையில் போலி சாமியார் ஒருவர் பணம் பறிக்கும் நோக்கில் ஈடுபட்டுள்ளார்.

கையில் கற்களை தூக்கிக்கொண்டு பக்தர்கள் மற்றும் நடைபாதையில் கடை வைத்திருந்த நரிக்குறவர் சமூக பெண்ணை போலி சாமியார் தாக்க முயற்சி செய்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணும் போலி சாமியாரை தாக்கி சட்டையை பிடித்து இழுத்து அடித்து உதைத்துள்ளார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அப்போது வைரலாகி வரும் நிலையில், போலீசார் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Big commotion in Tiruvannamalai Fake preacher beaten and kicked What happened


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->