சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கு.!
bjp case file in chennai high court against chennai police commissioner
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
அந்த வகையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததாகவும், ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியின் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியதாகவும் கூறி பா.ஜ.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில், "போராட்டம் நடத்த 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை, எந்த கட்டுப்பாடும் இல்லாமல், விண்ணப்பம் பெறாமல் ஆளுங்கட்சியினரின் போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் சட்ட விதிகளை மீறி செயல்பட்ட சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
bjp case file in chennai high court against chennai police commissioner