பா.ஜ.க பொதுக்கூட்டம்: அடுத்த 5 ஆண்டுகளில்... நமது போராட்டம் தொடரும் - பிரதமர் பேச்சு.!
BJP general meeting PM Modi speech
சேலத்தில் நடைபெறும் பா.ஜ.கவின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, 'என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்' என தமிழில் பேச்சை தொடங்கினார்.
பிறகு பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டில் 2 பாதுகாப்பு வளாகத்தை உருவாக்குகிறது. இரண்டில் ஒன்று தமிழ்நாட்டில் அமைகிறது. தமிழ்நாட்டில் ஒரு ஜவுளி பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது.
சேலம் பகுதியில் ரயில்வே கட்டமைப்புக்கு ரூ. 260 கோடி செலவிடப்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் இணைந்திருக்கும் கூட்டணி தலைவர்களை நான் வணங்குகிறேன்.
உங்களது ஆதரவோடு தமிழகத்தை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வோம். இது எங்கள் அனைவரின் உத்தரவாதம். தமிழ் மொழி இந்தியாவின் மிகவும் பழமையான மொழி.
எந்த நாட்டில் பழமையான மொழி இருக்கிறதோ அந்த நாடு பெருமையுடன் மார்தட்டிக்கொள்ளும். என்னால் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முடியவில்லை என வருத்தமாக இருக்கிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் ஊழலை எதிர்த்து நமது போராட்டம் அமையும். பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
BJP general meeting PM Modi speech