முதல்வர் ஸ்டாலினின் மனைவி, தங்கையை இப்படி பேசியிருந்தால்... அதிரவைக்கும் டிவிட்!  - Seithipunal
Seithipunal


பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இனியவன் என்கிற ஒரு நபர், தான் ஒரு அரசாங்க ஊழியர் என்று சொல்லிக்கொண்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை   'மூதேவி முண்டை' என்று கேவலமாக, தரக்குறைவாக பேசியதோடு, பிரதமரை மிக அவதூறாக பேசியுள்ளது தி மு கவின் வெறுப்பு அரசியலை, தரம்தாழ்ந்த கேவல அரசியலை உணர்த்துகிறது. 

அந்த நபரோடு சேர்ந்து தமிழ்நாடு அரசு பாட நூல் கழகத்தின்  தலைவர் லியோனியும் பேசியுள்ளது அருவருப்பின் உச்சக்கட்டம். இந்த இருவரையும் தமிழக காவல் துறை கைது செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டும். 

இந்த நபர் சொல்வது போல் அரசு ஊழியராக இருந்தால் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அதே போல் லியோனியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். 

இல்லையேல், தமிழக அரசு ஊழியர்களை திமுகவும், தமிழக அரசும் மத்திய அமைச்சரை, பிரதமரை திட்டமிட்ட ரீதியில் விமர்சிக்க தூண்டுவதாகவே பொருள் கொள்ளப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைவதை தமிழக அரசே வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு.

திமுக பெண் அமைச்சரையோ அல்லது மாண்புமிகு. முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களையோ,  குடும்ப உறுப்பினர்களையோ, முதல்வரின் தங்கை மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களையோ, அல்லது வேறு எந்த ஒரு பெண்ணையோ பொதுவெளியில் கண்ணியக்குறைவாக யாரவது பேசியிருந்தால் என்ன நடவடிக்கையை தமிழக காவல்துறை எடுத்திருக்குமோ, அதே நடவடிக்கையை மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களை தரக்குறைவாக பேசிய தமிழக அரசு ஊழியரான  இனியவன் என்ற கொடியவன் மீது எடுக்க வேண்டும். இல்லையேல், 'திராவிட மாடல்' அரசின் பெண்ணின விரோத போக்கு அமபலப்படும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாஜக மகளிரணி தேசிய செயலாளர் வானதி சீனிவாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கும் இவரது இழிவான பேச்சுக்கு  மிக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் மீது காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Heads Condemn to DMK Iniyavan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->