கோவை மாநகராட்சியில் சுகாதார சீர்கேடு - தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


கோவை மாநகராட்சியில் சுகாதார சீர்கேடு நடந்துள்ளதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-

"கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் சரியாக அகற்றப்படாததால் மிகப்பெரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதிக வருவாய் கொடுக்கும் கோவை மாநகராட்சியில் மக்கள் தரமான வாழ்வதற்கான கட்டமைப்பை மாநில அரசு ஏற்படுத்தி தராதது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை இரண்டு நாட்கள் நடத்தியது பெயருக்கு நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் தான். பல்வேறு துறைகளில் தமிழக அரசு தோல்வியை சந்தித்து வருகிறது. மாநில அரசின் பல்வேறு குறைபாடுகளுடன் மழை பாதிப்புகளும் சேர்ந்துள்ளது. மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை திமுக-வினர் பொருட்படுத்தாமல் உள்ளனர். இதற்கான பலனை வருகின்ற சட்டசபைத் தேர்தலில் அனுபவிப்பார்கள்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp mla vanathi seenivasan condems tn govt for degradetion in covai muncipal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->