இது அநியாயம்! தமிழக அரசுக்கு அவசர கோரிக்கை வைத்த வானதி சீனிவாசன்! - Seithipunal
Seithipunal


கிண்டி சிறுவர் பூங்கா கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று, பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், சென்னை கிண்டி சிறுவர் பூங்கா 30 கோடி ரூபாய் செலவில் புறனமைக்கப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை நேற்று முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரடியாக சென்று திறந்து வைத்தார்.

இந்தப் பூங்காவை பார்வையிட மற்றும் பயன்படுத்த ஐந்து வயது முதல் 12 வயது உடையவர்களுக்கு பத்து ரூபாய் கட்டணம் ஆகவும், பெரியவர்களுக்கு ₹60 கட்டணம் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கிண்டி பூங்கா நுழைவு கட்டணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,

சென்னை கிண்டியில் புனரமைக்கப்பட்ட  சிறுவர் இயற்கை பூங்காவை நேற்று திறந்து வைத்துள்ள  முதல்வர் முக ஸ்டாலின் அவர்களே, இந்த பூங்காவில் 5 - 12 வயதுடையவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.60 கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளீர்கள். இது ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினரின் கேளிக்கை மற்றும்   பொழுதுபோக்குக்கான செலவினம் அதிகரித்துள்ளது.

சிறுவர்கள் தனியாகப்  பூங்காவிற்கு வரப்போவதில்லை. ஒரு குடும்பத்தில் உள்ள சிறுவர் வருகிறார் என்றால், அவருடன் அம்மா,அப்பா, உறவினர்கள் என்று குறைந்தது 2-4 பேர் வரை வருவார்கள். 

அதனால் ஒரு குடும்பத்தினருக்கான கட்டணம் மிக அதிகமாக உள்ளது. எனவே  பெரியவர்களுக்கு ரூ.60 நிர்ணயம் செய்திருப்பது நியாயமானதல்ல. சிறுவர்களுக்கு ரூ.10 என்பதைப்போல  பெரியவர்களுக்கான கட்டணத்தை ரூ.20 என்று நிர்ணயம் செய்யப் பொதுமக்கள் சார்பாகக்  கோரிக்கை வைப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MLA Vanathi TNGov Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->