போராட்டத்தை அறிவித்த அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் எருமைப்பாலின் விலையை ரூ.51 ஆகவும், பசும்பாலின் விலையை ரூ.44 ஆகவும், அதாவது லிட்டருக்கு ரூ.10 உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். 

3 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டு இருப்பதாக ஆவின் நிறுவனம் அறிவித்தது. உற்பத்தியாளர்கள் கோரியதை விட ரூ. 7 குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும், ஆவின் ஆரஞ்சு நிற உறையில் சில்லறையில் விற்கப்படும் நிறைக்கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூ. 12 உயர்த்தியும் ஆவின் நிறுவனம் அறிவித்தது.

இதற்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்த நிலையில், ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தின் 1,200 ஒன்றியங்களில் வரும் 15ம் தேதி, ஆவின் பால் விலை உயர்வை கண்டித்துபாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Protest Aavin milk price hike


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->