பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியர் - ஆந்திராவில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை வெட்டி தண்டனை கொடுத்த ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் கேஜிபிவி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு காலை நேரத்தில் தாமதமாக வந்த 18 மாணவிகளின் தலைமுடியை ஆசிரியர் சாய் பிரசன்னா என்பவர் வெட்டியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்று ஆசிரியர் சாய் பிரசன்னா மாணவிகளை மிரட்டியும் உள்ளார். இருப்பினும் மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்ததில், மாணவிகளிடம் ஒழுக்கத்தை வளர்க்கவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக ஆசிரியர் சாய் பிரசன்னா தனது செயலை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher cut school student hair in andira for late come


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->