சில்வர் பேப்பருக்கு தமிழகத்தில் அதிரடி தடை! வைரலாக பிரியாணி வீடியோ எதிரொலி!
Food Parcel Plastic paper ban in Tamilnadu
பார்சல் வாங்கிட்டு வந்த பிரியாணியின் கவரில் இருந்த சில்வர் கலர் பவுடர் கையில் ஒட்டி வருவதாகவும், இது உணவில் கலந்து விஷம் ஆகுவதாகவும், சமூக வலைத்தளங்களில் ஒரு நபர் வெளியிட்டு இருந்த வீடியோ பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
மேலும், இது போன்ற கவர்களை எப்படி உணவு பாதுகாப்புத்துறை அனுமதிக்கிறது என்று கேள்வியும் எழுப்பப்பட்டு இருந்தது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிய நிலையில், தற்போது உணவு பாதுகாப்புத் துறை ஒரு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, இனி உணவகங்களில் பார்சலுக்கு சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவர் பயன்படுத்த உணவு பாதுகாப்பு துறை தடை விதித்துள்ளது.
தடையை மீறினால் உணவு பாதுகாப்புத் துறை சட்டப்படி கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் உணவகங்களில் சில்வர் பேப்பர் பயன்படுத்தினால் கடைக்கு சீல் வைப்பதுடன், 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Food Parcel Plastic paper ban in Tamilnadu