12 வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. காற்றின் தரம் 100ஐ தாண்டினாலே அது, சுவாசிக்க ஏற்ற காற்று இல்லை. ஆனால் டெல்லியில் மாசு 400ஐ தாண்டியிருக்கிறது. 

பனிமூட்டம் போல காற்று மாசு நிலவுவதால், சாலைப்போக்குவரத்து மட்டும் இன்றி விமானப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகரித்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், அதிகரிக்கும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி, அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதேபோல், அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றவும், மீதமுள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 6 முதல் 9ம் வகுப்பு வரை மற்றும் 11ம் வகுப்புக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த டெல்லி அரசு அறிவுறுத்தி இருந்தது. டெல்லியில் ஏற்கனவே 5-ம் வகுப்பு வரை ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, ஆன்லைனில் பாடங்களை நடத்தலாம் என்றும் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு மிகவும் கவலை அளிப்பதாகவும், பயிர் கழிவு எரிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

supreme court order online class to 12 students in delhi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->