மோசடி வழக்கில் பாஜக மாநில செயலாளர் அதிரடி கைது..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் மோசடி புகார் தொடர்பாக பாஜக நெசவாளர் அணியின் மாநில செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தமிழ்நாடு பாஜக நெசவாளர் அணியின் மாநில செயலாளர் மின் ரமேஷ் என்பவர் தன்னிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்தாக கூறி புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் பேரில் கொரட்டூர் காவல்நிலைய போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், மோசடி தொடர்பான வழக்கு பாஜக தமிழ்நாடு நெசவாளர் அணியின் மாநில செயலாளர் மின்ட் ரமேஷ் என்பவரை கொரட்டூர் போலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி மின்ட் ரமேஷ் என்பவர் பிரபல ரவுடியாக வலம் வந்த நிலையில் இவர் மீது வடசென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP state secretary arrested in fraud case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->