பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற ஆடை அணிய தடை.. எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!
Black dress banned in Periyar University graduation ceremony M.P. Su.Venkatesan condemned
நாளை ஆளுநர் தலைமையில் நடைபெற உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பெரியார் பல்கலைக்கழகத்தின் 21 வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் ஆளுநர் தலைமையில் 28-06-2023 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது.
அச்சமயம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைப்பேசிகள் எடுத்துருவதை தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு மதுரை எம் பி சு வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "ஆளுநர் வருகைதரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிறஆடை அணிந்து வரக்கூடாதென்று சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன்." என் தெரிவித்துள்ளார்.
English Summary
Black dress banned in Periyar University graduation ceremony M.P. Su.Venkatesan condemned