ஐஸ் பெட்டிக்குள் கண்ணாமூச்சி ஆட்டம்., பலியான பிஞ்சுகள்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், மைசூர் அருகே உள்ள நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்த நாகராஜூசிக்க தேவம்மா என்பவரின் மகள் பாக்யாவும் (வயது12). அதே பகுதியை சேர்ந்த ராஜாகவுரம்மா என்பவரின் மகள் காவ்யாவும் (வயது 7).    ஐஸ்கிரீம் கடை அருகே சில குழந்தைகளுடன் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது, குழந்தைகள் இருவரும் ஐஸ்கிரீம் கடைக்குள் இருந்த குளிர்சாதன பெட்டிக்குள் மறைந்திருந்தனர். திடிரென்று அந்த பெட்டி பூட்டிக்கொண்டது.

பெட்டிக்குள் இருந்து குழந்தைகள் இருவரும் சத்தமீட்டனர்.  யாருக்கும் கேட்கவில்லை. விளையாட சென்ற குழந்தைகளை காணவில்லை என்று பாக்யா, காவ்யா இருவரது பெற்றோர்களும் தேடினர்.

இறுதியாக ஐஸ்கிரீம் பெட்டியை திறந்து பார்த்தபோது, அங்கு இரு குழந்தைகளும் மூச்சு திணறி உயிரிழந்த  நிலையில் கிடந்தனர். குழந்தைகளின் உடலை மீட்டு, அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Blindfolded game inside the ice box accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->