மயிலாடுதுறையில் பரபரப்பு : மணிக்கூண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்..! - Seithipunal
Seithipunal



மயிலாடுதுறை போலீஸ் கமிஷனர் அலுவகத்திற்கு இன்று காலை ஒரு மர்ம நபர் தொலைபேசி அழைப்பு விடுத்து, மயிலாடுதுறை மணிக்கூண்டு கோபுரத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையில் அங்கு சோதனை நடத்தப் பட்டு அது வெறும் புரளி என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் விவரம் வருமாறு, மயிலாடுதுறை காந்திஜி சாலை - பட்டமங்கலம் சாலையின் சந்திப்பில் ஒரு மணிக்கூண்டு கோபுரம் உள்ளது. இந்த மணிக்கூண்டு மயிலாடுதுறையின் பழைமையான நினைவுச் சின்னமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை மயிலாடுதுறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தொலைபேசியில் அழைத்த மர்ம நபர், மணிக்கூண்டு கோபுரத்தில் வெடி குண்டுகள் வைத்திருப்பதாக கூறியதையடுத்து, நாகை மாவட்டச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்களுடன் மணிக்கூண்டிற்கு சென்ற மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சுப்ரியா, மணிக்கூண்டு கோபுரத்தில் உட்புறமும், வெளிப்புறமும் வெடிகுண்டு உள்ளதா என்று கண்டுபிடிக்கும் சோதனை கருவிகள் கொண்டு அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

ஆனால் அந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் அங்கு இல்லை என்று தெரிய வந்ததையடுத்து, இந்த செய்தி வெறும் புரளி தான் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிய அந்த நபர் மர்ம யார் என்ற விசாரணையில் தற்போது மயிலாடுதுறை போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்று காலை மணிக்கூண்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bomb Threat For Mayiladuthurai Bell Tower


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->