தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!
Bomb threat to Tamil Nadu Chief Minister Stalin's house
சென்னையில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு மற்றும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு போன்ற இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் இல்லை என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Bomb threat to Tamil Nadu Chief Minister Stalin's house